குரோம்பேட்டை:
சென்னையை அடுத்த குரோம்பேட்டை இ.எஸ்.ஐ. பின்புறம் உள்ள கிழக்கு புதுவைநகர் பகுதியை சேர்ந்த சாந்தா (வயது 55) என்பவர் வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது சமையல் எரிவாயு பைப் வழியாக அடுப்பிற்கு செல்லும் போது அடைப்பு ஏற்பட்டு பைப் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தா, சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அவரது கனவர் கிருஷ்ணன் (வயது 65) மற்றும் அவரது மகன் திருநாவுக்கரசு (33) ஆகியோர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தபோது இவர்கள் மீது தீ பரவியது.
இவர்களின் அபயக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ் சம்பவத்தை அறிந்த தாம்பரம் மாமன்ற உறுப்பினர் மங்கையர் திலகம், ராஜ்குமார் ஆகியோர் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரும், தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்தை பார்வையிட்டனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, உயர் மருத்துவ மருத்துவர்களிடம் தொடர்புகொண்டு சிகிச்சையை தூரிதப்படுத்த கருணாநிதி எம்எல்ஏ கேட்டுகொண்டார். இதன்பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறி நிதி உதவி வழங்கினார். இப் பகுதி வாழ் மக்கள் மற்றும் கிழக்கு பகுதி கழக பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





