அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொடைக்கானல் சூரிய வானியற்பியல் ஆய்வகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் பதிவுசெய்யப்பட்ட சூரியப் படங்களை அடிப்படையாகக் கொண்டு, சூரியனின் கடந்த கால துருவக் காந்தச் செயல்பாட்டைத் மருவடிவமைக்கும் புதிய முறையை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு, சூரியனின் எதிர்கால காந்தச் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்க உதவும் முக்கிய தகவல்களை வழங்குகின்றன.அரியபட்டா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல சர்வதேச ஆய்வகங்களின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட இந்தப் பணி, 1904ஆம் ஆண்டு முதல் கொடைக்கானலில் சேகரிக்கப்பட்ட சூரியப் பதிவுகளை ஆய்வு செய்வதன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. சூரியனின் குரோமோஸ்பியர் பகுதியில் உருவாகும் பிரகாசமான “பிளேஜ்” மற்றும் காந்த வலையமைப்புகளைப் பதிவு செய்த புகைப்படங்கள், நூற்றாண்டிற்கும் மேலான காந்தச் செயல்பாட்டின் தடங்களை பதிவுசெய்துள்ளன.டிஜிட்டல் வடிவமாக மாற்றப்பட்டுள்ள இந்த தரவுகளை ஆய்வு செய்ய, ஆராய்ச்சியாளர்கள் தானியங்கி முறைகளைப் பயன்படுத்தி துருவப்பகுதிகளில் உள்ள பிரசமான பகுதியை கண்காணித்தனர். இந்த தரவுகள் கடந்த நூற்றாண்டில் சூரிய துருவக் காந்தப் புலத்தின் வலிமையை மதிப்பீடு செய்ய உதவுகின்றன.இந்த புதிய அணுகுமுறை, சூரியக் காந்தப் புயல்களைக் கணிக்கவும், செயற்கைக்கோள்கள் மற்றும் தொடர்பு அமைப்புகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191662(Release ID: 2191662) ***AD/SE/SH(Release ID: 2191829) Visitor Counter : 7Read this release in: English , Urdu , हिन्दी