பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மார்ச் 14 அன்று மேற்கு வங்கத்திற்குச் செல்கிறார். அன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில், கொல்கத்தாவில் சுமார் ₹18,680 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார்.இந்தப் பகுதியில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பிரதமர் 420 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட, சுமார் ₹16,990 கோடி மதிப்பிலான பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேற்கு வங்கம் – ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-19-ன் சில பிரிவுகளையும், மேற்கு வங்கத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-114-ன் சில பிரிவுகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்கள் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தி, பயண நேரத்தைக் குறைத்து, நெரிசல், மாசுபாட்டையும் குறைக்கும். இவை பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு, சுற்றுலாவையும் மேம்படுத்தும். இத்திட்டங்கள் இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமர் பல புதிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இதில் தேசிய நெடுஞ்சாலை-116ஏ-வின் 231 கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலை கரக்பூர்-மோரேகிராம் பொருளாதார வழித்தடப் பிரிவின் ஐந்து தொகுப்புகள் அடங்கும். இந்தத் திட்டம் கரக்பூர் – சிலிகுரிக்கு இடையிலான பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். இது மேற்கு வங்கத்தின் பஸ்சிம் மெதினிபூர், பங்குரா, ஹூக்ளி, புர்பா பர்தாமன், பிர்பும் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்கள் வழியாகச் செல்லும். இது கரக்பூர்-மோரேகிராம் பயண தூரத்தை சுமார் 120 கிலோ மீட்டரும் பயண நேரத்தை ஏழு முதல் எட்டு மணிநேரமும் குறைக்கும். தேசிய நெடுஞ்சாலை-14-ல் 5.6 கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலையில் துப்ராஜ்பூர் புறவழிச்சாரை கட்டுமானத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை-14-ல் காங்ஷாபதி மற்றும் ஷிலாபதி ஆறுகளின் மீது கூடுதலாக நான்கு வழிப் பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டுகிறார்.இந்தப் பயணத்தின் போது, பிரதமர் பல்வேறு கப்பல் போக்குவரத்து, துறைமுகம் தொடர்பான திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஹால்டியா கப்பல்துறை வளாகத்தில் உள்ள 2-வது தளத்தின் இயந்திரமயமாக்கல் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும். கிடர்பூர் கப்பல்துறையில் (கப்பல்துறை 1 – மேற்கு) மறுசீரமைப்புத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். மாநிலத்தில் பல்நோக்கு துறைமுக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் ஹால்டியா கப்பல்துறை வளாகத்தில் உள்ள 5-வது தளத்தை இயந்திரமயமாக்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.ரயில்வே துறையில், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், தேசிய தலைநகர் தில்லி பகுதிக்கு இடையேயான ரயில் இணைப்பை வலுப்படுத்தும் புருலியா-ஆனந்த் விஹார் முனையம் (தில்லி) விரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் காமக்யகுரி, அனாரா, தம்லுக், ஹால்டியா, பராபும், சியுரி உள்ளிட்ட ஆறு மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.பெல்டா – டான்டன் இடையேயான 16 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்றாவது ரயில் பாதை, கலைகுண்டா – கனிமோஹுலி இடையேயான தானியங்கி சிக்னல் அமைப்பு ஆகிய இரண்டு ரயில் திட்டங்களையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.மேற்கு வங்கத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துதல் ஆகியவற்றில் அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தத் திட்டங்கள் பிரதிபலிக்கின்றன.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள்1: கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்



