பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க நகர் மண்டலம், கொளத்தூர் – வில்லிவாக்கம் எல் சி 1 இரயில்வே மேம்பாலம் ரூ. 61.98 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மற்றும் ஸ்டீபன்சன் சாலையில் ரூ.43.46 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியினை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர் பாபு அவர்கள் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல் வழிகாட்டுதலின்படி கொளத்தூர் பகுதியில் வில்லிவாக்கம் பகுதியும் இணைக்கின்ற எல் சி 1 எனப்படுகின்ற மேம்பாலம் ரயில்வே துறையும் சென்னை மாநகராட்சியின் இணைந்து மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகள் முடிகின்ற தருவாயில் இருக்கின்றன என்பதனை இன்றைக்கு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம் சுமார் 61.98 கோடி ரூபாய் செலவில் 460 மீட்டர் அளவிற்கு அமைக்கப்பட்டு இருக்கின்ற இந்த பாலத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக கட்டுவதற்காக ஆட்சிப் பொறுப்பில் இல்லாத பொழுதும் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி அதேபோல் ஆட்சி பொறுப்பில் இல்லாத பொழுதும் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் சரி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் சரி தொடர்ந்து ஆட்சியாளர்களை வற்புறுத்தி வலியுறுத்தி இந்த பணிகளை வேகப்படுத்தி இன்றைக்கு இந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு விடக்கூடிய ஒரு நல்ல சூழல் உருவாக்க பெருமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே சாரும் இந்த வில்லிவாக்கம் எல் சி 1 ரயில்வே மேம்பாலம் மே மாதம் 13ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.
தொடர்ந்து ஸ்டீபன்சன் சாலையில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இந்தப் பாலத்தை 2 ஆண்டுகளிலேயே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்ற அளவுக்கு தொடர்ந்து இந்த பாலத்தின் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு ஏழு எட்டு முறை ஆய்வு செய்துள்ளார் இந்த இடத்திற்கு மூன்று முறை நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த பாலத்தின் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றத்தை கலந்தாய்வின் பொழுது கேட்டறிந்திருக்கின்றார். அந்த வகையிலே
ரூபாய் 43.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலமும் இன்றைய தினத்தில் இருந்து சரியாக ஒரு மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பார்கள் இந்த பாலப் பணியை வேகப்படுத்த முழு மூச்சில் ஈடுபட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்களையும் அதேபோல் நம்முடைய மாண்புமிகு மேயர் அவர்களையும் அதேபோல் ஸ்டீபன்சன் சாலையில் அமைந்துள்ள இந்த பாலப் பணியை தொடர்ந்து வேகப்படுத்துகின்ற முயற்சியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களையும் ஏனைய அதிகாரிகளுக்கும் அரசின் சார்பிலே நெஞ்சார்ந்த நன்றியை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொண்டு இந்த பாலத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் என்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி அவர்கள், முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், மத்திய வட்டாரத் துணை ஆணையர் திரு.ஷேக் அப்துல் ரகுமான் இ.ஆ.ப., அவர்கள், திரு. வி. க நகர் மண்டலகுழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ் குமார் அவர்கள், தலைமை பொறியாளர் (பொது) திரு. எஸ். ராஜேந்திரன் அவர்கள் உட்பட பலர் இருந்தனர் – பெருநகர சென்னை மாநகராட்சி தகவல்.






