நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்” காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ஜி.அய்யல் ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.ஈஸ்வரன், திருமங்கலம் தொகுதி தலைவர் ம.செல்லப்பாண்டியன், திருப்பரங்குன்றம் தொகுதி இளைஞரணி தலைவர் அ.அரவிந்தன், தெற்கு தொகுதி தலைவர் இளையகுமார், தெற்கு தொகுதி இளைஞரணி தலைவர் செ.தினேஷ், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் அப்பா பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





