சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ள ஏவுகணை உள்நாட்டுலேயே தயாரிப்பு…!

வெகு விரைவில் இந்திய ராணுவத்தில் பாகிஸ்தான், சீனாவை எதிர்கொள்ளும் வகையில் புதிய பிரலே ஏவுகணை சேர்க்கப்பட இருக்கிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது பிரலே ஏவுகணை. தரையிலிருந்து செலுத்தக் கூடிய ஏவுகணையான ‘பிரலே’ ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை 150 மீட்டர் தொலைவில் இருந்து 500 மீட்டர் வரை எதிரிகளின் இலக்கை குறிவைத்து தாக்கி அழிக்கக் கூடியது திறன் கொண்டது. இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை எல்லையில் பாகிஸ்தான், சீனாவின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை இந்த இருநாடுகளின் எல்லையில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. இது இந்திய ராணுவத்துக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

சீனாவின் டாங் பெங் 12, ரஷ்யாவின் இஸ்கந்தர் ஏவுகணைகளைப் போன்று வலுவானது. ரஷ்யா இந்த ஏவுகணையைத் தான் தற்போது உக்ரைன் உடன் நடக்கும் போரில் பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தானும் எதிரி நாடுகளிடம் இருந்து வரும் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணைகளை வைத்துள்ளது.

பிரலே ஏவுகணை சோதனை எந்தவித இடையூறும், தொழில்நுட்பக் கோளாறும் இன்றி இலக்கை நோக்கி வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. இதில் வெற்றியும் கிடைத்துள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரலே ஏவுகணையின் பாதையானது கடற்கரையோரத்தில் உள்ள கண்காணிப்பு கருவிகள் மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, அதன் இலக்கு மற்றும் செயல்திறனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரலே ஏவுகணை 350-500 கிமீ குறுகிய தூர ஏவுகணை. இது 500-1,000 கிலோ எடையை தாங்கும் திறன் கொண்டது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400