சீமானை கைது செய்ய நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் வலியுறுத்தல்

கும்பகோணம்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் த. சுந்தர் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில், “நாம் தமிழர் கட்சி சீமான், நரிக்குறவ இன மக்களைக் கேவலப்படுத்தியும், இவர்கள் நரிக்குறவர்கள் அல்ல, வந்தேறிகள் என தவறான தகவல்களைப் பேசி, எங்களைத் தொடர்ந்து இழிவு படுத்திக் கொண்டே இருக்கிறார். மேலும், எங்கள் சமுதாய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறார்.
இதேபோல், தேனி மாவட்டத்தில் வழங்கப்பட்ட இடத்தில் வசிக்கும் எங்கள் சமூதாய மக்களிடையே உள்ள ஒற்றுமையைச் சீர்குலைத்து, பிரிவினையை ஏற்படுத்தும் நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் வனவேங்கை கட்சி இரணியன் ஆகியோரை கண்டித்து வரும் 30ம் தேதி அதே மாவட்டத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து நரிக்குறவர் மக்களையும் திரட்டி போராட்டம் நடத்தவுள்ளோம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது, எங்கள் சமுதாய மக்களிடம் வாக்கு சேகரிக்க, அவர் வந்தால், கருப்புக் கொடி காண்பித்து புறக்கணிப்போம். எனவே, நரிக்குறவர் மக்கள் வசிக்கும் அனைத்து மாவட்டங்களிலும், சீமானை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தி, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம், அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி புகாரளிக்கவுள்ளோம். மிகவும் அடித்தட்டு மக்களான எங்கள் சமுதாயத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.