சென்னை:
நடப்பு ஆண்டு முதல் ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்கிறது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முக்கிய நகரங்களில் ஜி20 மாநாடு தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவாதம் நிதி, கல்வி, உணவு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் மேம்பாடு, எரிபொருள், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட தலைப்புகளை மையப்படுத்தி நடைபெறும்.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் கல்வி சம்பந்தமான மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் 2வது மாநாடு நிதி கட்டமைப்புக்காக இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாடு சென்னை கிண்டியில் உள்ள சோழா ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி தற்போது நாளை வரை (மார்ச் 26) சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.