தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தகக் காட்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 27.11.2024 முதல் 12.1.2025 வரை 17 நாட்கள் 48வது புத்தகக் காட்சியானது சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் நடத்தியது. 900 ஸ்டால்கள், லட்சக்கணக்கான தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் என பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தப் புத்தக அறிவுத் திருவிழாவில், சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா, உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வருகைப் புரிந்து புதிய புதிய நூல்களை வாங்கி மகிழ்ந்தனர். இந்த ஆண்டு சுமார் 20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.இந்தப் 2025 புத்தகத் திருவிழாவில், பபாசி சங்கம் சிறந்த நூலகர் விருதினை முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. அதன்படி விருது வழங்கும் கடந்த 10.01.2025 மாலை 6 மணிக்கு புத்தகக் காட்சி அரங்கில் நடைபெற்றது. விருது விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும், முனைவர் இரா.கோதண்டராமன் அவர்களுக்கு சிறந்த நூலகர் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்கள். நிகழ்வில் பபாசி சங்கத் தலைவர் திரு.சேதுசொக்கலிங்கம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும், புத்தக ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






