சென்னையில் பை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய 29 வடமாநில சிறுவர்கள் மீட்பு

சென்னை:
சென்னை மண்ணடி, மலையப்பன் தெருவில் சட்ட விரோதமாக பை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாகவும், அந்நிறுவனத்தில் வடமாநில சிறுவர்கள் பலர் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அரசு தொழிலாளர் துறையின் மூலம், முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கூடுதல் ஆணையர், இணை ஆணையர், புரசைவாக்கம் தாலுகா தாசில்தார், குழந்தைகள் உதவி மையத்தின் அதிகாரிகள் ஆகியோர் முத்தியால்பேட்டை போலீசாருடன் இணைந்து உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் கண்காணித்தபோது பை தயாரிக்கும் நிறுவனம் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதை உறுதி செய்து அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்நிறுவனத்தில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த 10 வயது முதல் 17 வயது வரை உள்ள 29 சிறுவர்கள், அடைத்து வைக்கப்பட்டு பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அச்சிறுவர்கள் மீட்கப்பட்டு, ராயபுரத்திலுள்ள அரசுகுழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக மேற்கொண்டு முத்தியால்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.