சென்னை:
சென்னையில் ஆகஸ்ட் 3ம் தேதி ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய ஹாக்கி தலைவர் பத்மஸ்ரீ திலீப், ஹாக்கி இந்திய பொதுச்செயலாளர் போலா நாத் சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆகஸ்ட் 3ம் தேதி ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2007க்கு பிறகு 16 வருடங்கள் கழித்து ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது.
மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆசிய ஹாக்கி போட்டிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா ஆகிய 6 நாடுகளை சேர்ந்த அணியினர் கலந்து கொள்கின்றனர். த
மிழகத்தில் ஹாக்கி போட்டியை மேலும் வலுப்படுத்தும் இளைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக அமைச்சர் ஒடிசாவுக்கு சென்று இதற்கான ஏற்பாடுகள் மற்றும் அனுமதியை பெற்றிருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.