சென்னை உள்ளிட்ட ஏழு விமான நிலையங்களில் விரைவு குடியேற்றப் பதிவு சேவைகளுக்கான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அகமதாபாதில் நாளை  தொடங்கி வைக்கிறார்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரான திரு அமித் ஷா,  2025 ஜனவரி 16-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சின், அகமதாபாத்  ஆகிய விமான நிலையங்களில் ‘விரைவு குடியேற்றப் பதிவு சேவைத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.  உள்துறை அமைச்சர் ஏற்கனவே 2024  ஜூன் 22-ம் தேதி புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்திலிருந்து இந்தத் திட்டத்தை   தொடங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ‘விரைவு குடியேற்றப் பதிவு சேவை – நம்பிக்கைக்குரிய பயணிகள் திட்டம்’ என்பது ‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையின் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த குடியேற்ற வசதிகளை வழங்குவதும், சர்வதேச பயணத்தை தடையற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதே இதன் நோக்கமாகும். முதற்கட்டமாக,  இந்த வசதி இந்திய குடிமக்கள், இந்திய வம்சாவளி அட்டைதாரர்களுக்கு இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.இத்திட்டம் ஆன்லைன் https://ftittp.mha.gov.in வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர, விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பயோமெட்ரிக் தரவு வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் அல்லது விமான நிலையம் வழியாக செல்லும்போது பெற்றுக் கொள்ளப்படும்.பதிவு செய்யப்பட்ட பயணிகள் விமான நிறுவனம் வழங்கிய போர்டிங் பாஸை இ-கேட்டில் ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் அவர்களின் கடவுச்சீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். வருகை மற்றும்  புறப்பாடுகளின் போது பயணிகளின் பயோமெட்ரிக் அடிப்படையிலான  மின்னணு-வாயில்கள் அங்கீகரிக்கப்பட்டு அவை தானாகவே திறக்கப்படும். இதனையடுத்து பயணியின் குடியேற்றப் பதிவிற்கு அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.நாடு முழுவதும் 21 முக்கிய விமான நிலையங்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக, டெல்லி தவிர, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய ஏழு முக்கிய விமான நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

சென்னை உள்ளிட்ட ஏழு விமான நிலையங்களில் விரைவு குடியேற்றப் பதிவு சேவைகளுக்கான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அகமதாபாதில் நாளை  தொடங்கி வைக்கிறார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube