பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., இன்று (25.06.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பருவமழைக்கு முன்னதாக அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ.ப., அவர்கள், தலைமைப் பொறியாளர் (பொது) .எஸ்.இராஜேந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.







