வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலில்
வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இட்லி வடிவமைப்பின்
மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் தேர்தல்
விழிப்புணர்வு இட்லி கண்காட்சி நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல்
அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர்
ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள்
இன்று (15.04.2024) மெரீனா கடற்கரையில் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 3 பாராளுமன்றத்
தொகுதிகளிலும், வருகின்ற 19.04.2024 வெள்ளிக்கிழமையன்று
நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையிலான
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக,
இன்று மெரீனா கடற்கரையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் சிறுதானியத்தினைப் பயன்படுத்தி, மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரம், தேர்தலுக்கான முத்திரை, 100% வாக்குப்பதிவு,
ஓட்டுப்பதிவிற்கான மை வைக்கப்பட்ட விரல் வடிவம் உள்ளிட்ட பல்வேறு
வடிவங்களில் சிறுதானிய இட்லி தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தி விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. மேலும் இக் கண்காட்சியினைப் பார்வையிட்ட மக்களுக்கு
சுவையான சிறுதானிய இட்லி, குல்பி சாக்லேட் இட்லி வழங்கப்பட்டது.
“சிறுதானிய இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது; தவறாமல் ஓட்டு போட்டா
ஜனநாயகத்துக்கு நல்லது” என்கிற இந்த தேர்தல் விழிப்புணர்வு இட்லி
கண்காட்சியினை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து
மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை
ஆணையாளர் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., கூடுதல் மாவட்ட தேர்தல்
அலுவலர் மற்றும் துணை ஆணையர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப.,
இட்லி இனியவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு