சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் கொளஞ்சி 45. இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கியிருந்து கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே மேம்பாலத்தின் கீழே தென்காசியைச் சேர்ந்த அவினாஷ் 22 என்பவரும் தங்கியிருந்து, கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

கொளஞ்சியும், அவினாஷும் நேற்று முன்தினம் இரவு தரமணி இணைப்புச் சாலையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றவே அவினாஷ் தன்னிடம் இருந்த கத்தி எடுத்து கொளஞ்சியை படுபயங்கரமாக கத்தியால் தாக்கினார். இதில் படு காயமடைந்த கொளஞ்சி சம்பவம் நடந்த இடத்திலேயே உயிர்யிழந்தார்.
இதுகுறித்து பொதுமக்கள், வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அங்கு விரைந்து சென்று கொளஞ்சியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரினச் சேர்க்கை விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.






