சென்னை நகரில் புறநகர் ரயில் சேவைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக வெளியூரிலிருந்து விடியற்காலை சென்னை வருவோர், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் இந்த ரயில் சேவையை நம்பி உள்ளனர்.
இந்நிலையில் இன்று சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயிலிலிருந்த 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் கல்லூரி, அலுவலகம் செல்வோர் பணிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ரயில்வே காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






