தஞ்சை மறைமாவட்டத்துக்கு சொந்தமான வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக அபகரிக்கும் செயலில் ஈடுபடும் தஞ்சை மாநகர ஆணையரின் போக்கைக் கண்டித்து தஞ்சையில் சிறுபான்மையினர் சார்பில் அரசின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர ஆணையருக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.