தமிழகத்தில் எக்ஸ்.பி.பி. மற்றும் பி.ஏ.2 வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு

சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு ஆண்டும் விருந்தாளி போன்று வந்து கொண்டே இருக்கிறது. இதனை ஒழிக்க மருத்துவத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இதன் தாக்கம் குறையவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தமிழகத்திலும் தற்போது அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 150-ஐ கடந்துவிட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 91 சதவீத பேருக்கு எக்ஸ்.பி.பி. வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி முதல் மார்ச் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 144 பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 86 மாதிரிகள் தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களிடம் இருந்தும், 36 மாதிரிகள் சமூகத்தில் இருந்தும், 20 மாதிரிகள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டது.
இந்த 144 மாதிரிகளில், 131 மாதிரிகள் எக்ஸ்.பி.பி. வகை கொரோனா தொற்றும், 10 மாதிரிகளில் பி.ஏ.2 வகைவகை தொற்றும், 2 மாதிரிகளில் பி.ஏ.5 வகைவகை கொரோனா தொற்றும், 1 மாதிரியில் பி.1.1 வகை கொரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி 91 சதவீத மாதிரிகளில் எக்ஸ்.பி.பி. வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் எக்ஸ்.பி.பி. மற்றும் பி.ஏ.2 வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த எக்ஸ்.பி.பி. வகை தொற்று வேகமாக பரவக் கூடியதாக உள்ளது. தும்மல் மூலமாக கூட அடுத்தவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது பாதிப்பு எண்ணிகை அதிகரித்து வருகிறது. ஆனால், மரணங்களின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகி வருகிறது. தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையும் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. மேலும், இந்த வகை வைரஸ்களில் வீரியம் குறைவாகவே உள்ளது. வேகமாக பரவும் என்கிற காரணத்தால் தான் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400