தமிழகத்தில் புதிதாக 15 சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் 10 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்குவதற்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் புதிதாக 15 சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் 10 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்குவதற்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தடையில்லா சான்று வழங்கியுள்ளார் என்ற செய்தியைக் குறிப்பிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா தமிழக அரசுக்குச் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். புதிதாகத் தொடங்கப்படும் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அனைத்துமே தனியார் பள்ளிகள் தான் என்பது நிதர்சனம் என்று கூறியுள்ள அவர், தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு, அதைவிட இரண்டு மடங்கு கூடுதலாக அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி மீது அக்கறை செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தால் கடந்த ஆண்டு இழுத்து மூடப்பட்ட 208 அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்கவும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகக் குறைவாக இருக்கும் 1,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு உயிரூட்டவும் முதலமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள பள்ளிகளில் உடனே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், தனியார் பள்ளிகளுக்கு நிகராகக் கணினி ஆய்வகம், வேதியியல் ஆய்வகம், நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளையும், கற்பித்தல் முறைகளையும் மேம்படுத்த வழிவகை செய்யும் மத்திய அரசின் ‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) திட்டத்தில் தமிழகம் இணைய வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு ஹெச். ராஜா அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.