நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிகிறது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி 29-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ராமநாதபுரம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.






