அதிமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அந்த மண்டலங்களுக்கு சென்று ஆய்வுப்பணிகள் மேற்கொண்டனர்
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் எங்கு மழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதியை நாங்கள் செய்திருக்கிறோம் என கூறுகிறார்கள் ஆனால் தற்போதைய நிலை என்ன என்பதை ஆட்சியாளர்கள் தெரிவுபடுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தமிழக அரசு அலட்சியபடுத்தியதால் தான் சென்னையில் கனமழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன். இதற்கு தமிழக அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். புயல், மழைக்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் பாதிபுக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள. 5 நாட்கள் கடந்த பின்பும் தற்போது வரை சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மழைநீர் வடிகாலால் ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என கூறினார்கள். ஆனால் சென்னையில் தற்போது தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் மேயரை முற்றுகையிட்டு மக்கள் கேள்வி எழுப்பியிருக்க மாட்டார்கள். பால் தட்டுப்பாட்டை தவிர்க்க முன்னேற்பாடாக பால் பவுடர் விநியோகம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒதுக்கப்பட்டு, அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அந்த மண்டலங்களுக்கு சென்று ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு, அங்கிருக்கும் பகுதிகளில் வடிகால் பகுதிகளில் எங்கெல்லாம் தூர்வார வேண்டும் என கணக்கெடுத்து உடனுக்குடன் தூர்வாரி அடைப்புகளை நீக்கிய காரணத்தால் மழைகாலத்தில் தண்ணீர் தேங்காமல் விரைவாக அப்புறப்படுத்தப்பட்டது.
அதிமுக ஆட்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ உதவிகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும் செய்து சரியான முறையில் செய்து கொடுத்தோம். அதிமுக ஆட்சி காலத்தில் மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் முறையாக நடைபெற்று வந்தன. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் மிக தாமதமாக நடைபெற்று வருகிறது. புயல் குறித்து முன்னேற்பாடுகளை செய்யாமல் தற்போது பார்வையிட்டு வருகிறார். மத்திய அரசு அளித்த நிதியை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீர் செய்ய வேண்டும். மழை வெள்ளம் தேங்கிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.






