தமிழக மீனவர்கள் கைது – ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை:
மாலத்தீவில் கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை, மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டுமென ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த 12 மீனவர்கள் ‘ஹோலி ஸ்பிரிட்’ என்ற படகில் கடந்த 22ம் தேதி மீன்பிடிக்க சென்றபோது மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையின் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகின் ஓட்டுநருக்கு, கடந்த 1.11.2023 அன்று, மாலத்தீவு குடியரசின் மீன்வளம், கடல் வளம் மற்றும் வேளாண்மை அமைச்சகம், மாலத்தீவின் பணமதிப்பில் 42,00,000, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடியே 25 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இந்த அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் மேற்படி அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும், அதுவரை அந்த மீன்பிடி படகு மாலத்தீவு காவல் படையினரின் வசம் இருக்கும் என்றும் மாலத்தீவு அதிகாரிகள் கூறியுள்ளனர். மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும், மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். இந்த அபராத தொகை மிக அதிகமானது. அவர்களால் இந்த பெருந் தொகையை செலுத்த இயலாது. இது அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் வறுமையில் கொண்டு சேர்த்துவிடும்.

மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் பிரச்னையில், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, மீன்பிடி படகிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த அந்த மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணத்தை அளிக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார் மு.க.ஸ்டாலின்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400