சென்னை:
தமிழ்நாடு மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் இந்தியன் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய மோட்டார் சர்வீஸ் மோட்டார் வெளிச்சம் ஆகிய சங்கங்கள் இணைந்து சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எ.கணேஷ் பங்கேரா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் மாநில பொது செயலார் ஆர்.இ. சேவராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய மோட்டார் சர்வீஸ் மோட்டார் வெளிச்சம் நிறுவனத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இக்கூட்டத்திற்கு பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அகில இந்திய மோட்டார் சர்வீஸ் மற்றும் மோட்டார் வெளிச்சம் நிறுவனர் தலைவர் ஜெயக்குமார் மற்றும் தமிழ்நாடு மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்க மாநிலத் தலைவர் கணேஷ் பங்கேரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் எங்களுடைய நீண்ட கால கோரிக்கையில் முதலாவதாக தமிழ்நாட்டில் 50 இடங்களில் உண்டு உறைவிட வசதியுடன் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 6மாதத்திற்கு முன்பு ஆயிரம் இடங்களில் பார் கிங் டெர்மினல் ஏற்படுத்தி தருவதாகவும் இதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும் என்றும் இதை மாநில அரசு உடனடியாக மத்திய அரசின் பார்வைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
மேலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டும் ஓட்டுநறுடன் வாகனத்தை பறிமுதல் செய்வதால் லாரியும் லாரி உரிமையாளர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் தவறு செய்யும் ஓட்டுநர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிய கூடாது என்று கூறினார். மேலும் வண்டி விபத்திற்குள்லானல் முறையான விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை அளித்து யார் மீது தவறு என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ஓட்டுநரை கைது செய்ய கூடாது. மேலும் லாரியில் சரக்கு ஏற்றி மற்றும் இரக்கும் இடங்களில் ஆன்லைன் அபராதங்கள் வசூலிக்க கூடாது. மேலும் பைனான்ஸ் கம்பெனிகள் வண்டியை பறிமுதல் செய்யும் போது வண்டியில் உள்ள பொருட்களை மற்றொரு வாகனத்தில் மாற்றி அனுப்ப ஆவண செய்ய வேண்டும் என்றும் காலாவதியான சுங்கசாவடிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து இதுபற்றி மனு கொடுக்க உள்ளோம் என்று கூறினார்கள். இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த இந்தியன் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் மாநிலத் தலைவர் கே.சுரேஷ் பாபு ,செயலாளர் பன்னீர்,கௌரவத் தலைவர் வைத்தியநாதன், துணைத் தலைவர் ரங்கநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் பி.சாமிநாதன், கௌரவத் தலைவர் சுப்பிரமணி, பொருளாளர் கதிர்வேல்,இணை செயலாளர் சதிஷ் குமார், இணை பொருளர் தமிழ் அரசு ஆகிய சங்க நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்கள். இதில் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இடம் மாறுகிறதா தலைமைச் செயலகம்?!…
👉வரலாற்று சிறப்பு மிக்க தமிழ்நாடு தலைமைச் செயலகம் இட நெருக்கடியால் மாற்றப்பட உள்ளதாகத்






