வேங்கைவயலில் இரண்டு வருடம் கழித்து பட்டியல் சமூகத்தினர் மீது குற்றம் சுமத்தும் தமிழக காவல் துறை…….உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.ஊராட்சி தலைவரின் கணவரை வாட்ச்மேன் நியமனம் விவகாரத்தில் பழிவாங்கவே குடிநீரில் மலம் கலந்ததாக 3 பேர் மீது தமிழக அரசு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மூன்று பேரும் தலித் இனத்தை சேர்ந்தவர்கள் எனபது இதில் குறிப்பிடத்தக்கது.எவிடென்ஸ்கதிர் 2023 பிப்ரவரியில் இருந்தே பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி போட முனைகிறார்கள் என தலித் மக்களிடம் டிஎன்ஏ பரிசோதனை எடுத்த போதே குற்றம் சாட்டினார்.தலித் அமைப்புகள் வேங்கைவயல் சம்பவம் சம்மந்தமாக தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. எவிடென்ஸ்கதிர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளி ஆக்குகிறார்கள் என பிப்ரவரி 2023 லேயே கூறிய குற்றச்சாட்டு எல்லாம் இந்த குற்றப்பத்திரிக்கையின் மூலம் அரசுக்கு நீண்ட காலம் முன்பே குற்றம் செய்தோர் யார் என தெரிந்தும் இதில் தொடர்புடைய மூவருமே தலித்கள் என்பதால் தான் இதை மறைத்ததோ என்ற சந்தேகம் எழுகிறது.இவர்கள் தான் உண்மையாக குற்றம் செய்தவர்கள் எனில் ஏன் இத்தனை தாமதம் இதை வெளியில் சொல்ல?வேங்கைவயல்பாதிக்கப்பட்ட மக்கள் மீதே குற்றம் சுமத்தும் ‘சாதிய நீதி’ திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். சாதியாதிக்கத்திற்கு இவ்வளவு பச்சையாக துணைபோகும் திமுக போலீஸின் செயல்பாடுகள் அரசமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கிறது. முத்தரையர் சமூகத்திற்கு ஆதவாக திமுக அரசு கண்டுபிடித்த முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் அப்பாவிகள். முரளிராஜா என்பவர் காவல்துறையைச் சார்ந்தவர். மூவருமே பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் கேட்க நாதியில்லையென குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். விரைவில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும், விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் பெருந்திரள் மக்கள் போராட்டம் அறிவிக்கப்படும்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு