அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்
திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட வேண்டிய நிலையில் உள்ள  பணிகளுக்கு விரைவில் ஒப்பந்தங்கள் கோர நடவடிக்கை மேற்கொள்ளவும், ஒப்பந்த நிலையில் உள்ள பணிகளை விரைவில் தொடங்கி முடித்திடவும், ஒப்பந்ததாரர்கள் சாலைப் பணிகள் மேற்கொள்ளும் பொழுது, போடப்படும் சாலைகளின் தரம் மற்றும் உறுதித் தன்மை ஆகியவற்றை கண்காணிக்கவும், சாலைப் பணிகள் தொடங்கும் பொழுது அங்கு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அறிவிப்பு பலகை வைத்திடவும், சாலைகளில் பணிகள் மேற்கொள்ளும் பொழுது அவ்விடத்தை சுத்தமாக வைத்து கொள்ளவும் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள் அமைக்கும் பணிகளில் பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து 5 நாட்களுக்கு மேல் பணிகளை தொடங்காத தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-45க்குட்பட்ட பி.வி. காலனி 8வது, 18வது மற்றும் 23வது தெரு, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-71க்குட்பட்ட சாந்தி காலனி, தேசிகா காலனி, பெரம்பூர் பிரதான சாலை லேன், ஹஜி அப்துல் ரஹீம் தெரு, ஹைதர் கார்டன் 4வது தெரு (ஒரு பகுதி), வார்டு-73க்குட்பட்ட வீரசெட்டி தெரு மற்றும் பார்த்தசாரதி தெரு, வார்டு-75க்குட்பட்ட செங்கல்வராயன் தெரு, ஏ.கே.சாமி 1வது, 7வது மற்றும் 9வது தெரு, நல்லய்யா தெரு, நியூ செக்ரடரியேட் காலனி, சுப்பராயன் பிரதான தெரு மற்றும் முதல் தெரு, ரங்கநாதபுரம் குடிசைப்பகுதி, ஒத்தவடை தெரு, செக்ரடரியேட் காலனி 6வது தெரு, வார்டு-76க்குட்பட்ட நாராயண் முதல் தெரு, நாராயண் பிரதான தெரு, தேவி பவானி எல்லையம்மன் கோயில் தெரு, செல்லப்பா தெரு, வார்டு-78க்குட்பட்ட ரங்கியா தெரு, ஆலந்தூர் மண்டலம், வார்டு-162க்குட்பட்ட தில்லை கங்கா நகர் 4வது தெரு, வார்டு-163க்குட்பட்ட சாந்தி நகர் 4வது மற்றும் 8வது தெரு, அடையாறு மண்டலம், வார்டு-172க்குட்பட்ட சதானிபேட்டை முதல் தெரு, செங்கையம்மன் கோயில் பிரதான தெரு, வார்டு-174க்குட்பட்ட பெசன்ட் நகர் முதல் அவென்யூ மற்றும் 4வது குறுக்கு தெரு, வார்டு-176க்குட்பட்ட பிள்ளையார் கோயில் தெரு, ராம் நகர் 3வது தெரு, ஏ.ஜி.எஸ். காலனி 4வது குறுக்குத் தெரு, பெசன்ட் நகர் 4வது அவென்யூ, கற்பகம் கார்டன் 2வது பிரதான சாலை, பெருங்குடி மண்டலம், வார்டு-184க்குட்பட்ட காமராஜ் நகர் 10வது குறுக்குத் தெரு, வீரபாண்டியன் கட்டபொம்மன் தெரு, வார்டு-186க்குட்பட்ட அன்னை தெரசா நகர் 12வது தெரு மற்றும் 4வது குறுக்குத் தெரு ஆகிய உட்புறச் சாலைகளில் பணிகள் மேற்கொள்ளும் 8 ஒப்பந்ததாரர்களுக்கு   ரூ.42,65,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சாலைப் பணிகளை குறித்த காலத்தில் தொடங்கி கவனமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) திரு.சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள்,  துணை ஆணையாளர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள், வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு) அவர்கள், திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., (மத்தியம்) அவர்கள், திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு) அவர்கள், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், துறை அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை