+2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 10 மாணவ, மாணவியர்களுக்கு நவீன கைக்கடிகாரத்தினை பரிசளித்த சென்னை மேயர்

2022-2023ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற 10 மாணவ, மாணவியர்களை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி நவீன கைக்கடிகாரத்தினை பரிசாக வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் பயின்று 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற எம்.எச்.சாலை. மார்க்கெட் தெரு, சைதாப்பேட்டை மற்றும் மடுவின்கரை ஆகிய சென்னை பள்ளிகளைச் சார்ந்த  என்.காயத்ரி, எஸ்.தவசியம்மாள், ஏ.மோனிஷா, பி.விஷ்ணு வரதன், எஸ்.விஷாலி, டி.அஸ்வினி, எம்.நஸ்ரின் பேகம், எஸ்.ஸ்ரேயா, ஜி.துர்கா மற்றும் எஸ்.ரிஸ்வானா அன்ஜூம் ஆகியோரை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் நவீன கைக்கடிகாரத்தினை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.  உயர்க்கல்வி படிப்பிலும் தனிக்கவனம் செலுத்தி கல்வி பயின்று சிறப்பிடம் பெற்றிட வேண்டும் என்று மாணவர்களுக்கு மாண்புமிகு மேயர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள், கல்வி அலுவலர், உதவிக் கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்