திரிபுவாதங்களை செய்துவருகிறார் பிரதமர் மோடி : கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு…!

இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கான பரப்புரையை பிரதமர் மோடி ராஜஸ்தானி தொடங்கினார். இந்நிலையில் பிரதமர் மோடி திரிபுவாதங்கள் செய்துவருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார். அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்டம் முடிந்து, இரண்டாம் கட்டத்திற்கான பரப்புரையை இராஜஸ்தானில் பிரதமர் மோடி மேற்கொண்ட போது, ஆதாரமற்ற அவதூறு அடிப்படையில், சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். இதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை திரித்து, 2006இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதன் முன்பகுதியையும், பின்பகுதியையும் விட்டுவிட்டு இடையில் சில வார்த்தைகளை மேற்கோள் காட்டி திரிபு வாதங்களைச் செய்திருக்கிறார். இதன் மூலம் அரசமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றை பிரதமர் மோடி அப்பட்டமாக மீறியிருக்கிறார். அவரது இந்தப் பரப்புரையின் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்திருக்கிறது.

முதற்கட்ட தேர்தல் எதிர்பார்த்த வெற்றியைத் தராது என்கிற நிலையில், தோல்வி பயத்தின் காரணமாக மிகமிக இழிவான  பிரச்சாரத்தை அரசியல் ஆதாயத்திக்காக பிரதமர் மோடி செய்திருக்கிறார். அவரது உரையின் மூலம் பிரதமர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை உறுதிபடுத்தியிக்கிறார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூக நீதிக்காக சமூகப் பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, ‘தாய்மார்களிடம், சகோதரிகளிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கெடுத்து அதை மற்றவர்களுக்குக் (இஸ்லாமியர்களுக்கு) கொடுப்போம்’ என்று குறிப்பிட்டிருப்பதாக அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார். மேலும், “அதிக குழந்தைகளைப் பெற்றுகொள்பவர்கள் ஊடுறுவல்காரர்கள்” என மறைமுகமாக இஸ்லாமிய சமுதாயத்தினரைக் கொச்சைப் படுத்தியிருக்கிறார். இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முற்படும் பிரதமர் மோடிக்கு இனிவருகிற தேர்தல்களில் மக்கள் உரிய பாடத்தைப்புகட்டுவார்கள்.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் தொடங்கிய ‘மோடிஎதிர்ப்பு அலை’, நாடு முழுவதும் வீசிக் கொண்டிருப்பதை உணர்ந்ததன் விளைவுதான் மோடியின் இந்த வெறுப்புப்பேச்சு. இதன் மூலம் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிற ‘நவீன கோயபல்ஸ்’க்கு உரிய படிப்பினையை மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400