16. பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்
—————————————-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாா்ப் பொறுத்தல் தலை.(குறள்: 151)
விளக்கம்:
தன் மீதே நின்று தன்னைத் தோண்டுபவறையும் விழாமல் தன்னுடைய
ஆதரவில் இருந்து கொண்டு தம்மையே தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்பவரைப் பொறுத்ததலே தலையாய அறமாம்.






