17. அழுக்காறாமை
===================
அவ்விய நெடுஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். (169)
விளக்கம்:
பொறாமை இருக்கும் உள்ளத்தையுடையவனுடைய ஆக்கமும் பொறாமையில்லாத செவ்விய உள்ளத்தை உடையவனது வறுமையும் எக்காரணமும் பற்றி நேர்ந்தன என்று ஆராயும் பொழுதே இரண்டும் அழிந்துவிடும். அதாவது காணாமல் போய்விடும். (நினைக்க = ஆராய, படும் = அழிந்துவிடும்.)