19. புறங்கூறாமை
ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது தீதாகப் பேசாதிருத்தல்.
===============================================================
அறனழிஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழிஇப் பொய்த்து நகை (குறள் 182).
விளக்கம்:
“அறம் என்று ஒன்று இல்லை” என்று அறத்தை அழித்துப்பேசி அறமல்லாதவைகளைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாத இடத்தில் அவனைப் பழித்துப் பேசி அவனைக் கண்ட இடத்தில் பொய்யாகச் சிரித்து முகம் மலர்தல் தீயது ஆகும்.






