கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்
குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
குறள் விளக்கம்: பிறக்கும் பொழுதே தொடர்ந்து வருகின்ற பிறவி வினை பிறந்து வாழும்பொழுது செய்யப்படும் தீவினையாகிய தன்வினை ஆகிய இரண்டும் இருளில் சேர்க்கும். இரண்டு வினைகளும் இறைவனின் மெய்யான புகழைப் புரிந்து கொண்டு போற்றுபவரிடம் சேர்வது இல்லை எனவும் இந்த இரண்டு வினைகளும் இல்லாதவரே இறைவன் எனவும் அறியப்படுகிறது.
திருமறை விளக்கம்: அவ்வாறே திரு மறையும் மத்தேயு 1:21 “அவள் ஒரு
குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு (ஈசன்) என்று பேரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் “எனவும் யோவான் 8:46 “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப் படுத்தக் கூடும்? எனவும், யோவான் 19:4 “பிலாத்து வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். “என்றும் சங்கீதம் 51:5 “இதோ. நான் துர்குணத்தில் உருவானேன் என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” எனவும். ரோமர் 3:23 எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி, “என்றும். யோவான் 1:12 “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” என்றும் திருமறையும், திருக்குறளும் இருளில் சேர்க்கும் இரு வினைகளையும் அந்த வினைகளிலிருந்து விடுபட வினையில்லா இறைவனிடம் சேர்தலே அடிப்படை எனும் ஒரே கருத்தையே விளக்குவதை அறியலாம்






