1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 6. வாழ்க்கை துணை நலம்
இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை. – குறள் : 53
ஒருவனுடைய வாழ்க்கைத் த்ணைவி சிறப்புடைய நற்செயல்களால் நிறைந்தவளாய் இருந்தால் அவனுக்கு இல்லாதது எதுவும் இல்லை. எல்லாம் அவனுக்கு இருப்பதாகும். மனைவி அச்சிறப்புக்கு உரியவளாய் இல்லாதவளானால் அவனுக்கு மற்ற சிறப்புகள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாதவையாகும்.