திருப்பூர் பாண்டியன் நகர் மின்வாரிய பணியாளர்கள் விவகாரத்தில் சுமூக தீர்வு: நன்றி தெரிவித்த ஊழியர்கள்

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் மின்வாரிய பணியாளர்களை காவல்துறையை சேர்ந்த சிலர் தகாத வார்த்தையால் பேசியதாகவும், சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்ததாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மின்வாரிய பணியாளர்கள் கோரிக்கை விடுத்தருந்தனர்.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர்களுக்கு ஈ.பி.அ.சரவணன் புகார் அளித்ததின் பேரில் துரிதமாக உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்கள் தமிழ்நாடு அரசும், காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும், விரைவாக செயல்பட்டு திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் சரக காவல் உதவி ஆணையர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலை பாதிக்கப்பட்ட தரப்பில் பாண்டியன் நகர் மின்சார வாரிய அலுவலக உதவி மின்பொறியாளர் அனுப்பர்பாளையம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர், தெற்கு பெருமாநல்லூர் உதவி மின் பொறியாளர், தொழிற்சங்க பிரதிநிதி மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன், வேலம்பாளையம் தொமுச கனகராஜ், போர்மேன்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மின்வாரிய பணியாளர்கள் மின்வாரிய ஒப்பந்ததாரர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு தவறு செய்த பூண்டி காவல் நிலைய காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடந்த விரும்பத்தகாத செயலுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதன் பேரில் இருதரப்பில் சமூக தீர்வு காணப்பட்டது.
இனிவரும் காலங்களில் இது போன்ற சம்வபங்கள் நடைபெறாது என காவல் துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. மின்வாரிய பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களில் உரிய முறையில் விரைவாக சுமூகமாக தீர்வுகண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், மாநகர காவல் கண்காணிப்பாளருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணனுக்கும் அனைத்து மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.