தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, நாளை புதுதில்லி விஞ்ஞான் பவனில் “73 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூன்று பத்தாண்டுகளுக்குப் பிறகு கிராமப்புற நிர்வாகம்” என்ற தலைப்பில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தேசிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார் மற்றும் பிற உயர் அதிகாரிகள் முன்னிலையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் விவேக் பரத்வாஜ் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் சைலேஷ் குமார் சிங் ஆகியோர் தேசிய கருத்தரங்கைத் தொடங்கி வைக்க உள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள், தேசிய ஊரக வளர்ச்சிக் கழகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ், மாநில ஊரக வளர்ச்சிக்கழகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகள், கல்வியாளர்கள், ஐ.நா முகமை அதிகாரிகள், உள்ளிட்டோர் கிராம நிர்வாகம் குறித்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.