தேசிய பத்திரிகையாளர் தின விழா திருச்சியில் நடைபெற உள்ளது. மூத்த பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், நிருபர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பத்திரிகைத் துறை தோழர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்:
கருத்தரங்கம்..
1.பத்திரிகையாளர் பாதுகாப்பு..
2.பத்திரிகையாளர் உரிமைகள்..
3.பத்திரிகையாளர் சலுகைகள்..
4.பத்திரிகையாளர் கடமைகள்..
5.பத்திரிகையாளர் ஒற்றுமையின் அவசியம்..
ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வழங்குதல்.
சங்க பாகுபாடு இன்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ரூபாய் 1 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும். (கட்டணமில்லா சேவை)
பத்திரிகையாளர்கள் கெளரவித்தல்..
நலத்திட்ட உதவிகள் வழங்குதல்..
பத்திரிகையாளர்கள் கலந்தாய்வு கூட்டம்..
பத்திரிகையாளர் நலனை காத்திட, பத்திரிகைத் துறையை மேம்படுத்த நாம் அனைவரும் கைகோர்த்து நமது உரிமைகள், சலுகைகள் பெற ஆக்கபூர்வமாக செயல்படுவோம்.!
தேசிய பத்திரிகையாளர் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் வாரீர்.!
சங்க பேதமின்றி பத்திரிகையாளர் என்ற ஒற்றை குடையின் கீழ் சங்கமிப்போம் வாரீர்.!
பத்திரிகையாளர் நலனையே நோக்கமாக கொண்டு இந்த விழா நடத்தப்படுகிறது.
நவம்பர் 16 தேசிய பத்திரிகையாளர் தினம் நமக்கான நாளில் நாம் ஒன்றுக் கூடி ஆலோசனை செய்து உத்வேகம் கொள்வோம் வாரீர்.!
நாள்: 16.11.2023 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு
இடம்: ஹோட்டல் அருண், திருச்சி.1 திருச்சி ஜங்ஷன் அருகில்.
பத்திரிகை தோழர்களே அனைவரும் வருக! வருக!
தங்களின் வருகையை உறுதிப்படுத்த வேண்டுகிறோம். ஒன்றிணைவோம் பத்திரிகையாளர் நலன் காப்போம்..
அனைவரும் வருக! வருக!!