தொடர் விடுமுறைக்காக சென்னையில் இருந்து இன்று 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை:
தொடர் விடுமுறையை முன்னிட்ட சென்னையில் இருந்து இன்று பல்வேறு இடங்களுக்கு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,- நாளை (28-ந் தேதி) மீலாது நபி, (29-ந் தேதி) சனிக்கிழமை, (அக்.1-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை, (அக்.2-ம் தேதி) காந்தி ஜெயந்தி என 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இதற்கிடையில் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுக்கும் பட்சத்தில் ஐந்து நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து இன்று இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 250 பஸ்களும், நாளை (29-ம் தேதி) 450 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதேபோல், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,100 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும், (அக்டோபர் 2-ம் தேதி) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் ஷ்ஷ்ஷ்.tஸீstநீ.வீஸீ மற்றும் tஸீstநீ இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு