அன்பு நண்பர்களுக்கு வணக்கம், கடந்த பல ஆண்டுகளாக மே முதல் நாளில் நடைபெற்று வரும் நந்தனம் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் இந்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி நாளை(1-5-2023) திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் 7 மணி வரை நண்பர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது நாம் அனைவரும் பயின்ற நந்தனம் கலைக்கல்லூரி வளாகத்தில் நாளை சந்திப்பு நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் நண்பர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு முன்னாள் மாணவ நண்பர்கள் அனைவரும் வருகை தந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் மேலும் இந்த செய்தியை நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கூட்டத்தில் பங்கேற்க வழி செய்ய வேண்டுகிறோம்…
நன்றி! நன்றி! நன்றி!
இங்ஙனம்
நந்தனம் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் குழு!






