நாடு முழுவதும் தொழிலாளர் சேம நல நிதி அமைப்பின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் முறை முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது

ஓய்வூதிய சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு மைல்கல் நடவடிக்கையாக, தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995ன் கீழ் புதிய மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல் முறையின் முழு அளவிலான கட்டமைப்புப் பணிகளை  தொழிலாளர் சேம நல நிதி நிறுவனம்  2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்தது.2024ம் ஆண்டு  டிசம்பர் மாதத்தில் 68 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 1570 கோடி ரூபாய் அளவிற்கு  ஓய்வூதியம் வழங்கப்பட்டது.மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறையின் முதல் சோதனை அடிப்படையிலான செயல்பாடுகள் 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஜம்மு, ஸ்ரீநகர் மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 49,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய தொகையாக சுமார் 11 கோடி ரூபாய்  ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இரண்டாவது  முறையாக மேற்கொள்ளப்பட்ட சோதனை அடிப்படையிலான செயல்பாடுகள் 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 24 மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 9.3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு சுமார் 213 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.இந்த புதிய நடைமுறை குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா,” தொழிலாளர் சேம நல நிதி நிறுவனத்தின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் முறையை  முழு அளவில் செயல்படுத்துவது  ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதிய தொகையை நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும், அனைத்து வங்கிகிளையிலிருந்தும் தடையின்றி பெற அதிகாரம் அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.