பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 2 தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திரிசூலம் மற்றும் செம்பாகம் பகுதிகளில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 1.55 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சிறுமின் விசை நீர்தேக்க தொட்டியை மக்களின் பயன்பாட்டிற்காக இ.கருணாநிதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் 2 வது மண்டல குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, ஏ.கே கருணாகரன், இ.எஸ்.பெர்னார்ட், பகுதி செயலார்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.