பம்மல்:
தமிழக முதலமைச்சரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் வடக்கு பகுதி 4வது வட்ட தி.மு.க. சார்பில் குத்துச்சண்டை போட்டி இன்று தொடங்கியது. நாளை (2ம் தேதி) வரை 2 நாட்கள் பம்மல் மின்வாரிய அலுவலகம் அருகில் நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சியில் சித்ரா தமிழ்குமரன் தலைமை தாங்கினார். சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பரிசுகளை வழங்குகிறார்.
பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளருமான இ. கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி த.ஜெயகுமார் பம்மல் வடக்கு பகுதி செயலாளர், வே.கருணாநிதி 1வது மண்டல குழு தலைவர், பம்மல் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தாம்பரம் மாநகர செயலாளர் வைத்தியலிங்கம், முன்னாள் எம்எல்ஏ, தலைமை தீர்மான குழு செயலாளர் கோ.காமராஜ் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் பொன் பாஸ்கரன், தமிழ் நாடு குத்துச்சண்டை கழகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை 4வது வட்ட செயலாளர் தமிழ்குமரன் 4,வது வட்ட செயலாளர் செய்திருந்தார்.