பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிகளை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முன்முயற்சிகள் காரணமாக பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தொழில்முனைவு முதல், கல்வி, சுகாதாரம், தூய்மைப் பணிகள், வீட்டுவசதி, விளையாட்டு, அறிவியல், நிர்வாகம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பெண்கள் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.கண்ணியம், வாய்ப்புகள், அதிகாரமளித்தல் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பெண்கள் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தவும், நாட்டைக் கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளில் வலுவான பங்களிப்பை வழங்குவதற்கு ஏதுவாக இத்தகைய நடவடிக்கைகள் உதவிகரமான அமைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அறிவியல், விண்வெளி, புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் சாதனைப் படைத்து வருவதற்கு பிரதமர் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மாற்றியமைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.பெண்களை பொருளாதார ரீதியாக சுதந்திரமாக செயல்படும் வகையில், பெரும் பங்காற்றி வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு ஆதரவளித்து வருவதாக அவர் கூறினார்.நாட்டைக் கட்டமைப்பதற்கான அடித்தளமாக இந்தியாவின் பெண் சக்தி திகழ்கிறது என்று கூறிய பிரதமர், இது தொடர்பான சமஸ்கிருத சுபாஷிதத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.சமூக ஊடக  எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர்ச்சியான பதிவுகளில் கூறியிருப்பதாவது:“கடந்த 12 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பணியாற்றி வருகிறது. இதன் பலனை பல்வேறு துறைகளின் வளர்ச்சியிலும் காணமுடியும்.ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வரும் பெண்கள் பாரத மாதாவின் பெருமையை உயர்த்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.