பாகிஸ்தான் பஞ்சம்: இலவச ரேஷன் பொருட்களை வாங்க முண்டியடித்த போது நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 12 பேர் பலி

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை தொடர்ந்து இலவச ரேஷன் பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணவீக்கம், வறுமை, வெள்ளம் போன்ற பிரச்சனைகளால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பாகிஸ்தானில் பசியும், பட்டினியாக மக்கள் தவித்து வரும் நிலையில் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் மூச்சு திணறி பெண்கள், குழந்தைகள் என 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமரே காரணம் என குற்றம் சாட்டிய பெண்கள், சமையல் எரிவாயு சிலிண்டர், குடிநீர், மின்சாரம், அரிசி உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் செத்து மடிவதாக கூறினர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400