பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இரக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் ஆகிய தலைமைப் பண்புகளே பிரதமர் மோடியை தொலை நோக்குப் பார்வையுள்ள பிரதமராக உருவாக்கியுள்ளது. நரேந்திர மோடி தனது கடின உழைப்பின் மூலம் நமது தேசத்தின் உணர்வை உயர்த்தியுள்ளார். அவரது பிறந்தநாளில், அவர் மற்றொரு வெற்றிகரமான பதவிக்காலத்தையும், 100 வருட சேவையும் ஆற்ற வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






