பிரபுதேவாவின் 60வது படமாக உருவாகும் ‘வுல்ஃப்’… மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் !

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘வுல்ஃப்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரபல நடன இயக்குனரான பிரபுதேவா நடிப்பில் உருவாகும் 60வது படம் ‘வுல்ஃப்’. இந்த படத்தில் அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை ‘சிண்ட்ரெல்லா’ படத்தை இயக்கிய வினு வெங்கடேஷ் என்பவர் இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கதாநாயகன் மற்றும் வில்லன் ஆகிய இருவரும் ஓநாயின் குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள். எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பதான் இப்படத்தின் கதையாகும். இந்த படம் வரலாற்று காலத்திலிருந்து தற்காலம் வரை பயணிக்கும். அறிவியல் புனைக்கதை படமாக உருவாகி வரும் இப்படம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாகும். 

தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் வித்தியாசமான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஓநாய்கள் நடுவில் பிரபுதேவா இருப்பது இருக்கிறது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400