புதுச்சேரி:
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வருகிற 13-ஆம் தேதி முதல்அமைச்சர் என்.ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.
முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தராத நிலையில், இன்று மாலைக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022-23ம் ஆண்டு நிதி மேலாண்மையை சிறப்பாக அரசு கையாண்டுள்ளது எனவும் 2023 -24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தொகை ரூ. 11,500 கோடியாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.