புதுச்சேரியில் உள்ள தவளகுப்பம் பகுதியில் லிதா நகரில் இன்று இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது. புதுவை மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் புதுவை வேளாண் அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் தவளகுப்பம் பகுதியில் உள்ள லலிதா நகரில் இன்று நடைபெற்றது. இந்த இலவச பொது மருத்துவ முகாமினை அந்த தொகுதி எம்.எல்.ஏ வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்து வர்கள் செங்கதிரேசன், மடோனா டிசோசா மற்றும் புதுவை வேளாண் அறிவியல் நிறுவன தாளாளர் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





