பெங்களூருவில் பல ஆயிரம் கோடியில் ரியல் எஸ்டேட் தொழில்;*

நெருக்கடி கொடுக்கும் பாஜ தனிக்கட்சி தொடங்க காத்திருக்கும் அண்ணாமலை.

▪️. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இணையவே முடியாது என்ற நிலையில் விஜய் கட்சியில் சேர்ந்துவிட்டார்.

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி.தினகரன், ஆகியோரை வைத்து அதிமுக-பாஜ கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்து வந்த அண்ணாமலை, பெங்களூருவில் பல ஆயிரம் கோடியில் அவர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் தொழிலை வைத்து பாஜ மேலிடம் நெருக்கடி கொடுப்பதால், எப்போது கட்சியில் இருந்து நீக்குவார்கள், புதிய கட்சி தொடங்கலாம் என காத்திருக்கிறார்.

. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறைக்கு சென்று திரும்பி வருவதற்குள் அவரது பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டதுடன் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் எப்படியாவது அதிமுகவில் இணைந்துவிட வேண்டும் என்பதில் அதிதீவிரமாக இருந்து வருகின்றனர்.

. டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியையும், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். அதிமுக இவ்வாறு பிளவுபட்டு கிடக்கும் நிலையில் அனைவரையும் ஒன்றிணைத்து விடுவோம் என கூறியதால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 பேரும் பாஜவுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால், எங்கள் கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறிவிட்டார். அதையும் தாண்டி தலையிட்டால் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிடுவோம் எனவும் அதிரடியாக கூறினார். தற்போதுள்ள நிலையில் அதிமுகவும் கைவிட்டு போனால், தமிழ்நாட்டில் சுத்தமாக ஓரம் தள்ளப்பட்டு விடுவோம் என்று கருதி பாஜ அமைதியாக இருந்தது.

. முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் இந்த கோரிக்கையை வலியுறுத்திய நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பாஜ அவரை டெல்லிக்கு அழைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. இதனை செங்கோட்டையன் நம்பினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் நெருக்கடியின் காரணமாக செங்கோட்டையனுடன் நாங்கள் யாரும் பேசவில்லை என பாஜ மறுத்துவிட்டது. இதனால் செங்கோட்டையன் கடும் அதிர்ச்சியடைந்தார். எப்படியாவது கட்சியை ஒருங்கிணைத்துவிடலாம் என்றிருந்த நிலையில் செங்கோட்டையனுக்கு இருந்த முழுநம்பிக்கையும் போய்விட்டது.

:’வரும் 30ம்தேதி கோபிசெட்டிப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் உடனடியாக நடிகர் விஜய் கட்சியில் செங்கோட்டையன் சேர்ந்தார். இதனால் எப்படியாவது அதிமுகவில் இணைந்துவிடலாம் என்றிருந்த தினகரன், பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் எப்படியாவது எடப்பாடி பழனிசாமியை ஒழித்து கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த 4 பேரும், அவர்களுடன் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் சேர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் தான் அடிக்கடி அவர்களை ரகசியமாக சந்தித்து வந்தார்.

::பாஜ மாநில தலைவர் பதவி பறிபோன பிறகு அண்ணாமலை கட்சி செயல்பாடுகளில் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. தனக்கு முக்கிய பொறுப்பு எதாவது கொடுத்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தார். ஆனால், அவர் அதிமுக-பாஜ கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதாக மேலிடத்தில் தமிழக பாஜ தலைவர்களும், அதிமுக நிர்வாகிகளும் புகார் கூறியதால் அவருக்கு எந்த பதவியும் கொடுக்காமல் வைத்துள்ளனர். அதோடு அண்ணாமலை சமீபத்தில் பெங்களூருவில் தனது மனைவியின் சகோதரர் பெயரில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதுபற்றி பரபரப்பான புகார் எழுந்தபோது, நான் தொழில் செய்யக்கூடாதா, என் குடும்பத்தைக் காப்பாற்ற பிச்சையா எடுக்க முடியும், இந்த தொழிலையும் செய்வேன், வேறு பல தொழில்களையும் தொடங்குவேன் என்று அண்ணாமலை பேட்டியளித்தார்.

. இந்நிலையில், அவர் தலைவர் பதவியில் இருந்தபோது வீடு வாடகை மற்றும் செலவுக்கு நண்பர்கள் தான் பணம் தருகிறார்கள் என்று கூறிவந்தார். ஆனால், தலைவர் பதவி போன பிறகு கோடிக்கணக்கான முதலீட்டில் தொழில் தொடங்க பணம் எப்படி வந்தது என்று பாஜ நிர்வாகிகளே மேலிடத்தில் புகார் கொடுத்துள்ளனர். குறிப்பாக, அண்ணாமலை மீது ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடிக்கு ரகசிய ரிப்போர்ட் அனுப்பி உள்ளார். மற்ற கட்சி தலைவர்கள் மீதெல்லாம் ஊழல் புகார் கூறி வந்த அண்ணாமலை இப்போது தன் மீதே ஊழல் குற்றச்சாட்டு வந்துள்ளதே, இதுபற்றி மேலிடம் ஈடி, ஐடி மூலம் விசாரணைக்கு உத்தரவிடுமோ என்ற பயத்தில் உள்ளார்.

. பாஜவில் அவருக்கு எந்த பதவியும் கொடுக்காததோடு, தமிழக தேர்தலிலும் அவருக்கு பொறுப்பு தராமல் அதே நேரத்தில் தேர்தல் நடக்க உள்ள கேரளா அல்லது மற்ற மாநிலத்துக்கு பொறுப்பாளராக நியமித்து விரட்டவும் பாஜ மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதெல்லாம் தெரிந்த அவர் அதிமுக-பாஜ கூட்டணிக்கு எதிராக திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தன்னை பாஜவில் இருந்து நீக்கிவிட்டால் நல்லது என்று அவர் ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறார்.

அப்படி கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் தனது ஆதரவாளர்களை இணைத்து புதிய கட்சியை தொடங்கி, டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோருடன் சேர்ந்து விஜய் கட்சியில் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 15ம் தேதிக்குள் ஒருங்கிணைப்பு விவகாரத்தில் நல்ல முடிவு வராவிட்டால் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

. அதேபோல டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் கட்சி தொடங்க அண்ணாமலையும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதே சமயம் தனிக்கட்சி தொடங்கி, விஜய் கட்சியுடன் கூட்டு சேர்ந்தாலும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா போன்றோருடன் ஒத்துப்போகுமா? தனது அரசியல் எதிர்காலம் என்ன ஆகுமோ, நட்டாற்றில் தவிக்கவேண்டிய நிலை வருமோ என்றும் அண்ணாமலை கவலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றதற்கு அண்ணாமலைதான் காரணம்

. அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பிரிந்தவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை எடப்பாடி பழனிசாமி சேர்த்துகொள்ளும் வாய்ப்பே இல்லை என தெரிந்து கொண்ட செங்கோட்டையன் வேறுவழி இல்லாமல் விஜய் கட்சியில் சேர்ந்துவிட்டார். இதற்கு அண்ணாமலை தான் முக்கிய காரணம். இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி அசர மாட்டார்,’’ என்றனர்.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

கொல்கத்தாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர்

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சர்கள் சாந்தனு தாக்கூர் அவர்களே,  சுகந்தா மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர்  சுபேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, தாய்மார்களே, அன்பர்களே,இன்று, கொல்கத்தாவின் மண்ணிலிருந்து, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை, ரயில்வே மற்றும் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும், லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும். கரக்பூர்-மோரேகிராம் விரைவுச் சாலைப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். துப்ராஜ்பூர் புறவழிச்சாலை மற்றும் காங்ஷாபதி மற்றும் ஷிலாபதி ஆறுகளின் மீது கட்டப்படும் பெரிய பாலங்கள், இணைப்பை மேலும் மேம்படுத்தும். இந்தத் திட்டங்களுக்காக மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நண்பர்களே,இன்று, நாட்டில் ரயில்வேயை நவீனமயமாக்குவதற்கான ஒரு விரைவான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் மேற்கு வங்கம் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! எனவே, மேற்கு வங்கத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று, கலைகுண்டா மற்றும் கனிமஹுலி பிரிவுகளில் தானியங்கி தொகுதி சமிக்ஞை அமைப்பு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பான ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும், பயணத்தை பாதுகாப்பானதாக்கும், மேலும் பயணிகளுக்கு வேகத்தையும் வசதியையும் அதிகரிக்கும்.நண்பர்களே,இன்று, காமாக்யா குடி, அனாரா, தம்லுக், ஹால்டியா, பரபும் மற்றும் சியுரி ஆகிய ஆறு நிலையங்கள் அம்ரித் நிலையங்களாகப் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் வங்கத்தின் சிறந்த கலாச்சாரம் இப்போது இன்னும் பிரகாசமாக மிளிர்கிறது. இங்கு மேலும் பல நிலையங்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. புருலியா மற்றும் ஆனந்த் விஹார் முனையத்திற்கு இடையே ஒரு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை மேற்கு வங்க மக்களுக்கு மட்டுமல்ல, ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி மக்களுக்கும் பயனளிக்கும்.சாலை மற்றும் ரயில் இணைப்பு போலவே, துறைமுகங்கள் மற்றும் நீர் போக்குவரத்தும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பல தசாப்தங்களாக, இந்த விஷயத்தில் கிழக்கு இந்தியாவின் ஆற்றல் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இன்று, நீர்வழிகள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. இந்த திசையில், முக்கியமான துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன, நிறைவடைந்தவை, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா மற்றும் ஹால்டியா போன்ற துறைமுகங்கள் நீண்ட காலமாக கிழக்கு இந்தியாவில் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. ஹால்டியா கப்பல்துறை வளாகம் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. இது சரக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும், துறைமுக திறனை அதிகரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கான புதிய வசதிகளை உருவாக்கும். கொல்கத்தா கப்பல்துறை அமைப்புமுறையில் உள்ள பாஸ்குல் பாலத்தின் புதுப்பித்தல் பணியும் நடைபெற்று வருகிறது. கிதர்பூர் கப்பல்துறையில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் அனைத்தும் கிழக்கு இந்தியாவின் தளவாட அமைப்பை வலுப்படுத்தும்.நண்பர்களே,சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் தொடர்பான இந்தப் புதிய திட்டங்கள் மேற்கு வங்கத்தின் நவீன எதிர்காலத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள். சுற்றுலா போன்ற துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உள்ளூர் தொழில்கள் மற்றும் சேவைகள் வேகம் பெறும். இந்தியாவை எப்போதும் வழிநடத்தி வரும் மேற்கு வங்கம், ‘வளர்ச்சியடைந்த மேற்கு வங்கமாக’ மீண்டும் அந்த பெருமையை அடைய வேண்டும் என்பதே எங்கள் உறுதி. வலுவான இணைப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஒரு வளர்ந்த மாநிலத்தின் அடித்தளத்தை உருவாக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த விருப்பத்துடன், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், மாநில மக்கள்  கூடியிருக்கும் திறந்தவெளி மைதானத்திற்குச் செல்வேன். மேற்கு வங்க மக்களைச் சந்தித்து அவர்களிடையே மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும். 

பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக் கடையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,சென்னைப்