சென்னை:
சென்னை பெருங்குடி கல்லுகுட்டை மண்டலம் 14 வார்டு 184க்கு உட்பட்ட பகுதியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தெருவிளக்குகளின்றி இருண்ட பகுதியாக இருந்தது. இதனால் 325 தெருக்களில் வசித்து வரும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நடவடிக்கையின்படி இந்த 325 தெருக்களுக்கு 860 தெருவிளக்குகள் ரூ.78,58,200 மதிப்பீட்டில் தமிழ்நாடு மின்வாரிய மின்கம்பங்களில் பொருத்தப்பட்டது.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு தெரியப்படுத்தி பெரும் உதவியாக நின்ற சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அர்விந்த்ரமேஷ், பெருங்குடி மண்டலக்குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், சென்னை பெருநகர மாமன்ற உறுப்பினர் மகேஷ்குமார், பெருநகர சென்னை மாமன்றத்தின் துணை மேயர் ஆகியோர்களின் முயற்சியால் மக்கள் பயன்பெறும் வகையில் தெருவிளக்குகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக நேற்று நடைபெற்ற விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மின்விளக்குகளை இயக்கி வைத்தார்.
இவ் விழா நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, துணை ஆணையர் அமித் மற்றும் பாலவாக்கம் சோமு, வேளைச்சேரி மணிமாறன், பாலவாக்கம் விஸ்வநாதன், பாலவாக்கம் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு