பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட  பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும்  ரூ.18,28,790 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில்  குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  

மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. 

            பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 02.02.2023 முதல் 17.02.2023 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.9,23,000/- அபராதமும்,  கட்டுமானக் கழிவுகளை கொட்டிய  நபர்களுக்கு ரூ.7,68,890/- அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 427  நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு  ரூ.1,36,900/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

அதன் விவரம் :

  . எண்  மண்டலங்கள்குப்பைகள் கொட்டிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதம்

 (ரூ.)
கட்டுமானக் கழிவுகள் கொட்டிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதம் (ரூ.)காவல் துறையில் புகார்  அளிக்கப்பட்ட விவரம்சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதம் (ரூ.)
1.திருவொற்றியூர்36,30052,000257,000
2.மணலி22,50022,000214,000
3.மாதவரம்56,00022,0002410,000
4.தண்டையார்பேட்டை51,50040,0008010,500
5.இராயபுரம்56,70046,000419,200
6.திரு.வி.க.நகர்52,80042,000237,800
7.அம்பத்தூர்64,30054,000245,700
8.அண்ணாநகர்58,00067,000263,000
9.தேனாம்பேட்டை1,03,10080,000215,000
10.கோடம்பாக்கம்52,30081,0002411,500
11.வளசரவாக்கம்82,00076,000159,700
12.ஆலந்தூர்56,00051,0002610,500
13.அடையாறு71,50056,8902221,000
14.பெருங்குடி74,00056,0003112,000
15.சோழிங்கநல்லூர்86,00023,0002410,000
மொத்தம்9,23,0007,68,8904271,36,900

எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

செய்தி வெளியீடு : துணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்,

                            பெருநகர சென்னை மாநகராட்சி

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400