பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி   தெரிவித்துள்ளார்.

மறைந்த அன்பில் தர்மலிங்கத்தின் 29வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி வி.என் நகரில்  அமைந்துள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அன்பில் தர்மலிங்கத்தின் படத்திற்கு அவரது பேரனும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் பொய்யாமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு நலிந்தோர் மற்றும் கல்வி உதவிக்கான 3.5 லட்சம் மதிப்புள்ள காசோலை மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போது, “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையின்றி, மன மகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வை எழுத வேண்டும். மனநிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும்.கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள்  குறைக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்று பொதுத்தேர்வு நடைபெறும்.கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.